பிரதமர் மகிந்தவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ரணில் ஈடுபடவில்லை - ஐ.தே.க - Yarl Voice பிரதமர் மகிந்தவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ரணில் ஈடுபடவில்லை - ஐ.தே.க - Yarl Voice

பிரதமர் மகிந்தவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ரணில் ஈடுபடவில்லை - ஐ.தே.க




ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மகிந்தராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்ககளில் வெளியாகியுள்ள  படங்களை அடிப்படையாக வைத்து ஐக்கியதேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் பிரதமரும் ஒன்றாக இரவு உணவருந்துவதை இந்த படங்கள் காண்பித்துள்ளன.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில உள்ள ரணில்விக்கிரமசிங்கவின் அயலவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் பிரதமரும் கலந்துகொண்டனர்- அவர்கள் அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை-அமைச்சரவை மாற்றங்கள் குறித்தும் ஆராயவில்லை என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post