டெல்டா வகை வைரஸ் திரிபு பாதிப்பு காரணமாக தடுப்பூசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இருவேறு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தும் நிலை பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு இருவேறு தடுப்பூசிகளை ஒருவருக்கு கலந்து பயன்படுத்துவதால் ஆபத்து ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவிக்கையில்,
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இருவேறு 2 தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது சரியான நடவடிக்கை அல்ல. இது குறித்து உலக சுகாதார அமைப்பு இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.
தற்போது காணப்படும் குழப்பமான நிலையில் 2 வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதை பரிந்துரை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும்.
உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே வெவ்வெறு 2 தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றார்.
Post a Comment