புதிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் - Yarl Voice புதிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் - Yarl Voice

புதிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்




கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன

குறித்த சுகாதார வழிகாட்டல்கள் நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அமுலாகவுள்ளன.

இந்த சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவெளியிட்டுள்ளார்

01.பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க, ஆசன கொள்ளளவில் 50 சதவீதமானோருக்கு மாத்திரமே அனுமதி

02.மேல் மாகாணத்தில் இந்த எண்ணிக்கை 30 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

03.தனியார் / வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கேற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

04.ஆடைத்தொழிற்சாலைகள் உட்பட ஏனைய தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி

05.அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களைக்கொண்டு இயங்க அனுமதி.

06.சேவை அவசியத்துக்கு ஏற்ப, கடமைக்கு அழைக்கப்படக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவன பிரதானி தீர்மானிக்கலாம்.

07.வீட்டிலிருந்து பணியாற்றக்கூடியவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவது சிறந் ததாகும்.

08.திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி இல்லை. இருப்பினும் மணமகன் மற்றும் மணமகள் உட்பட ஆகக்கூடியது 10 பேரை மாத்திரம் கொண்டு பதிவு திரு மணத்தை நடத்தலாம்.

09.கொரோனா தொற்று இல்லாமல் ஒருவர் உயிரிழந்தால், சடலத்தைப் பொறுப்பேற்று 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்குகளை முன்னெடுக்க வேண்டும், இறுதிக் கிரியைகளில் 15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்

10.வங்கி, நிதி நிறுவனங்கள் மற்றும் அடகுப்பிடிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி, இச்சந்தர்ப்பத்தில் ஒரே தடவையில் மொத்தமாக 10 வாடிக்கையாளர்கள் மாத்திரமே சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

12.வீட்டில் இடம்பெறும் விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

13.மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

14.சமூக களியாட்ட விடுதிகளுடனான மதுபான சாலைகள், இரவு நேரக் களியாட்ட விடுதிகள், சூதாட்ட மற்றும் பந்தய நிலையங்கள் என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

15.சிறப்பங்காடிகள் மற்றும் ஆடை விற்பனை நிலையங்களில், அவற்றின் மொத்த இடப்பரப்பில் 25 சதவீதமான அளவு வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே ஒரே தட வையில் அனுமதி.

16.விற்பனை நிலையங்களை சுகாதார வழிமுறைகளுக்கமைய, திறக்க முடியும். ஒரே தடவையில் 3 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே உள்நுழைய முடியும்.

17.உடற்பிடிப்பு நிலையங்களை (ஸ்பா) திறப்பதற்கு அனுமதி.

18.சிகையலங்கார நிலையங்களில் சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பணிகளை முன்னெடுக்க முடியும்.

19.சிறைச்சாலை, முதியோர் மற்றும் சிறுவர் விடுதிகளுக்குச் செல்ல பார்வை யாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

20.திரையரங்குகள் மற்றும் நூதன சாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post