சீனாவின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு -ஆலோசனை குழுவிலிருந்து மூன்று உறுப்பினர்கள் இராஜினாமா - Yarl Voice சீனாவின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு -ஆலோசனை குழுவிலிருந்து மூன்று உறுப்பினர்கள் இராஜினாமா - Yarl Voice

சீனாவின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு -ஆலோசனை குழுவிலிருந்து மூன்று உறுப்பினர்கள் இராஜினாமா




சீனாவின் சினோவக் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு இலங்கையின் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை அனுமதி வழங்கிய பின்னர் கொவிட் தடுப்பூசிகள் தொடர்பான ஆலோசனை குழுவிலிருந்து மூன்று நிபுணர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

மருத்துவர்கள் ரஜீவ டி சில்வா காந்தி நாணயக்கார பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோர் கொவிட் தடுப்பூசிகள் தொடர்பான ஆலோசனை குழுவிலிருந்து விலகியுள்ளனர்.

தடுப்பூசி ஆலோசனை குழுவின்  ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டதன் காரணமாகவே தாங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சீன தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கவேண்டுமா என ஆராய்வதற்காக இடம்பெற்ற அவசர கூட்டத்தின்போது ஆலோசனை குழுவில் கடும் கருத்துவேறுபாடு காணப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்டா கொரோனா வைரசிற்கு எதிராக குறைந்தளவு பயன்அளிக்க கூடியது சினோவக் என ஆலோசனை குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆலோசனை குழுவின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் சீன தடுப்பூசியை இறக்குமதி செய்வதற்கு நிபந்தனையுடன் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post