பதினொரு நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த புனித பாப் ஆண்டவர் வத்திக்கான் திரும்பியபின் பொது வெளியில் அவரது நலன்விரும்பிகளுக்கு உரையாற்றினார். நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தங்களை களைந்துவிட்டு அவற்றில் இருந்து விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
"எமது பிரத்தியேக குறிக்கோள்களுக்கு பின்னால் ஓடுவதை விட்டு அவற்றை ஒருபக்கம் இடைநிறுத்தி வைப்போம், எவ்வாறு விடுப்பு எடுப்பது என்றும் தொலைபேசியை நிறுத்திவைக்கவும் கற்றுக்கொள்வோம்" என சென் பீட்டர்ஸ் சதுக்கத்தின் சாளரம் வழியாக வார உரையை நிகழ்திய பாப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
84 வயதாகும் போப்பாண்டவருக்கு அவரது பெருங்குடலின் ஒருபகுதியை நீக்கும் சத்திரசிகிச்சை ஆடி 14ம் திகதி நடத்தப்பட்டது. கடந்த 8 வருடத்தில் இவ்வாறான கவலைக்கிடமான நிலைமையை போப் பிரான்சிஸ் அவர்கள் எதிர்கொண்டது இதுவே முதல் தடைவை ஆகும்
நூறுக்கும் மேல்பட்ட மக்கள் வத்திகானில் ஒன்றுகூடி போப்பாண்டவரை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.
Post a Comment