இந்த முக்கியமான தருணத்தில் நிலைமையை சரிவர கையாள்வதற்காகவும் தேசிய அபிலாசைகளை அடைவதற்காகவும் ஓய்வின்றி பாடுபடுவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள பசில்ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகுமாறு அழைப்பு விடுத்தமைக்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றிதெரிவித்துள்ளார்.
தனக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய ஜயந்த கெட்டகொடவிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
Post a Comment