வேலனை கடலில் கரையொதுங்கிய கடலாமை - Yarl Voice வேலனை கடலில் கரையொதுங்கிய கடலாமை - Yarl Voice

வேலனை கடலில் கரையொதுங்கிய கடலாமை



வேலணை துறையூர் கடற்கரையில்  கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த கடலாமை இறந்த நிலையில் இன்றையதினம் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள்  கரை ஒதுங்கிய கடலாமையை இனங்கண்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு  அறிவித்தனர்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரிந்த நிலையில் அதன் பின்னர் கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து ஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் தீவகப் பகுதிகளில் ஒரு திமிங்கலம் ஒரு டொல்பின் மற்றும்
மூன்று கடலாமைகளும் ஒதுங்கியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post