தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறும் தரப்பினர் மற்றும் நிகழ்வுகளை நடத்துவோரை கைது செய்ய பொலிஸார் நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி சினிமாக்கள், விடுதிகள், கேளிக்கையகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பிற பொதுக் கூட்டங்களும் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே சுகாதார அதிகாரிகள் பிறப்பிக்கும் சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் இது குறித்து பொலிஸ் புலனாய்வு பிரிவு மூலம் தகவல்களை சேகரிக்குமாறும் பொலிஸ் நிலையங்கள் கேட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொதுமக்களை வீட்டுக்குள் தங்கியிருந்து தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment