யார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்த நிலையில் இதுவரை 200 மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை 148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மாவட்டத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 10166 ஆக உயர்ந்துள்ளதுடன், கொரோனா மரணங்கள் 200ஆக உயர்ந்திருக்கின்றது. இந்த அதிகரிப்பின் பெரும் பகுதி மே மாதத்தின் பிற்பகுதியில் நடந்ததாககும்.
தற்போது தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை சராசரியாக 130 வரை காணப்படுகின்றது. இது மோசமான அதிகரிப்பாகும். இந்நிலையில் மாவட்டத்திலுள்ள மக்கள் தங்களை முடக்கிக் கொண்டு அரசு அறிவித்துள்ளது.
யாழ்மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கலில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 36 ஆயிரம் பேர் வரை மதிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் கணிசமானவர்கள் தடுப்பூசியைப் பெறாமல் உள்ள நிலையில் இராணுவத்தின் பங்களிப்புடன் வீடுகளில் இயலாத இருப்பவர்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி ஏற்றம் இடம் பெற்று வருகிறது.
பொதுமக்கள் தடுப்பூசிகளை தவறாமல் ஏற்றுவதற்கு முன் வருவதோடு தற்போதைய யாழ்ப்பாணத்தின் நிலைமையை உணர்ந்து பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.
ஆகவே பொதுமக்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி 10 நாட்கள் வீடுகளில் இருப்பது எமது மாவட்டத்தையும், நாட்டையும் மோசமான நிலையிலிருந்து மீட்பதற்கு உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment