உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற, செஞ்சோலைப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் - Yarl Voice உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற, செஞ்சோலைப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் - Yarl Voice

உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற, செஞ்சோலைப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்




உணர்வெழுச்சியுடன் , செஞ்சோலைப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றது 

முல்லைத்தீவு - வள்ளிபுனம், சொஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு, இலங்கை வான்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கொடூர விமானத்தாக்குதலால் அப்பாவி மாணவிகள் 61பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 

இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட அப்பாவி மாணவிகளின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், முல்லைத்தீவு - கள்ளப்பாடு, வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் 14.08.2021இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. 

குறித்த அஞ்சலி நிகழ்வில் படுகொலைசெய்யப்பட்ட மாணவியர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, பூத்தூவி, சுடரேற்றி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன. 

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post