யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரியாலை கனகரத்னம் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187ஆக உயர்வடைந்துள்ளது.
இதவேளை, வடக்கு மாகாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250ஐத் தாண்டியுள்ளது.
Post a Comment