நாடு முடக்கப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெற யாழ்ப்பாணத்தில் 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளன.
இந்தத் தகவலை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
நிவாரணம் பெறத் தகுதியுடையவர்கள் குறித்த கணிப்பீடுகள் பிரதேச செயலகங்கள் ஊடாகமேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவை குறித்த விபரங்கள் திரட்டப்பட்ட பின்னர் கொழும்புக்கு அனுப்பவுள்ளோம். அடுத்த திங்கட்கிழமை முதல் நிவாரண நிதியை கையளிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment