நாடு முழுவதும் சுமார் 40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் மற்றும் நிமோனியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகளும் அவற்றில் அடங்குவதாக அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பு இரண்டையும் புறக்கணித்துள்ளதாகவும், இதன் விளைவாக கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தில் இலங்கை உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக கொவிட் -19 தொற்றுநோயைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பலமுறை வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைத்து கொரோனா தணிப்பிற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
தொற்றுநோய் அதிகரிக்கும் வரை அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை.
நாட்டில் கொவிட் -19 இன் தீவிரத்தை கருத்திற்க் கொண்டு ஒரு சில நாட்களுக்கு பொது முடக்கலை அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
Post a Comment