இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்துதரகத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் இந்திய தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்வு நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடைபெற்றது.
பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில் ராகேஷ் நட்ராஜ் மலர்தூவி மரியாதை செய்தார். இதன்போது யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடித்துவக்கும் இந்திய அமைதிப்படையினருக்கு அஞ்சலி செலுத்தினார்.
Post a Comment