நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றுப் போக்கை மாற்றுவதற்கு கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் நாட்டின் சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதற்கும் புதிய நடவடிக்கைகள் தேவையென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவிக்கையில், சமீபத்திய கொரோனா வைரஸ் தொற்றானது நாட்டின் பல முக்கிய வைத்தியசாலைகளை மூழ்கடித்துள்ளன.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகியவை சமீபத்திய கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பால் பாரிய சிக்கலை எதிர்நோக்கி வருகின்றன. தற்போதைய நிலை தொடர்ந்தால், பிரதான வைத்தியசாலைகள் முற்றிலுமாக சரிந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதான வைத்தியசாலைகளில் நோயாளர்களின் வருகையை சமாளிக்க முடியவில்லை,இது மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் MOH அதிகாரிகளிடமிருந்து உதவி பெற வழிவகுக்கும்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் ஏற்கனவே கட்டாயத்தின் கீழ் இருப்பதால், இது போன்ற நிலைமை முழு சுகாதார அமைப்பையும் சரித்து விடும்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, மருத்துவர்கள், தாதியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிற சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு 14 நாள் பொது முடக்கலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் நிபுணர்களைக் கேட்டு உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டும்.
தேவையான முடிவுகளுக்கு ஒரு நாள் தாமதப்படுத்துவது இலங்கையர்களின் பல நூற்றுக்கணக்கான மதிப்புமிக்க உயிர்களை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரம் குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதியை சந்தித்துக் கவலை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் ஐ.தே.க 21 அம்ச கொள்கையை வெளியிட்டது, அதில் இலங்கையர்களின் உயிர்களைப் பாதுகாக்கவும், சுகாதார அமைப்பைப் பாதுகாக்கவும் மற்றும் பொருளாதாரத்தை ஒருங்கிணைக்கவும் தேவையான நடவடிக்கைகள் அடங்குகின்றன.
எந்தவொரு பிரிவினரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை அரசியலாக்கக் கூடாது என்றும், தற்போதைய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment