சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாட்டை உடனடியாக முடக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் ஒரு வார காலத்திற்குள் அரசாங்கம் நாட்டை முடக்காவிட்டால் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
கொழும்பில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவித்த சுகாதார தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியான நிலையில் சுகாதார அதிகாரிகளை செவிமடுத்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் சுகாதார சேவை மாத்திரம் செயற்படும் என தெரிவித்துள்ளார்.
அனைவரும் வீடுகளில் இருப்பதை உறுதி செய்வதற்காகவே தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் கோரிக்கைகள் எதனையும் முன்வைத்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய தொழிற்சங்கங்களுடன் இது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் சுகாதார தரப்பினரை செவிமடுக்க வேண்டும்,அரசாங்கம் அவ்வாறு செயற்படத் தவறினால் அது சுகாதார துறையைப் பாதிக்கும், நாட்டை ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment