நடிகர் அஷ்வின் குமார் நடிப்பிலான ‘அடிபொலி’ பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான நடிகர் அஷ்வின் குமார், அதற்கும் முன்னும் பின்னும் பல குறும்படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்தார்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து அஷ்வின் குமார் குட்டி பட்டாஸ், லோனர் உள்ளிட்ட ஆல்பம் பாடல்களில் நடித்தார்.
அதன் பின்னர் அஷ்வின் குமார், டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பிலான ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் நாயகனாக நடிக்க கமிட் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் குஷி ஆகிவிட்டனர்.
இந்நிலையில் தான் அஷ்வின் நடிப்பிலான ‘அடிபொலி’ எனும் மற்றுமொரு வீடியோ ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அஷ்வின், குஷீ ரவி நடித்துள்ள இந்த பாடலுக்கு சித்துக்குமார் இசையமைத்து இயக்கியுள்ளார். இந்த பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார். தமிழ் குமரன் எடிட்டிங் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இந்த பாடலை சிவாங்கி பாடியுள்ளார். அவருடன் இணைந்து வினீஷ் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, ஷெரிஃப் நடனம் அமைத்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சக பங்கேற்பாளராக சிவாங்கி, அஷ்வின் இருவரும் பிரபலமாகினர். சிறந்த நண்பர்களான இவர்கள் இருவரும் இந்த புராஜக்டில் இணைந்திருப்பது உண்மையில் #அடிபொலி தான்
Post a Comment