ஆப்கானின் கிழக்கு பகுதியில் ஐஸ்ஐஎஸ் அமைப்பின் திட்டமிடல் பிரிவை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து அமெரிக்கா ஆளி;ல்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஆப்கான் விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற குண்டுதாக்குதலில் அமெரிக்க படையினர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்தே அமெரிக்கா ஐஎஸ் அமைப்பின் இலக்கு மீது ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது.
காபுலிற்கு கிழக்காக பாக்கிஸ்தான் எல்லiயில் உள்ள நங்கர்ஹர் பிராந்தியத்தில் ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் இந்த தாக்குதல் விமானதாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதா என்பதை தெரிவிக்கவில்லை.
நாங்கள் இலக்குவைக்கப்பட்ட நபரை கொலை செய்துள்ளோம் என்பது ஆரம்ப கட்ட தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளதாகதெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
Post a Comment