உலகமே டெல்டா கொரோனாவை எதிர்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில்இ வரும் காலங்களில் இன்னும்கூட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக பட்வுமன் என்று அழைக்கப்படும் சீனாவின் மூத்த ஆய்வாளர் ஷி ஜெங்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்துப் பல ஆண்டுகளாகத் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் பட்வுமன்என்று அழைக்கப்படும் சீனாவின் மூத்த ஆய்வாளர் ஷி ஜெங்லி இது குறித்துக் கூறுகையில்
"புதிய உருமாறிய கொரோனா வகைகள் தோன்றிக் கொண்டே தான் இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது. இதற்காக நாம் பீதியடையக் கூடாது. ஆனால் நீண்ட காலத்திற்கு வைரஸுடன் இணைந்து வாழ நாம் தயாராக வேண்டும்
கொரோனா வைரஸ் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது. அது மனிதர்கள் மத்தியில் வேகமாகப் பரவ தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. அதேநேரம் தடுப்பூசிகள் மிக மிக அத்தியாவசியமானவை.
கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பூசிகளால் தடுக்க முடியாது என்றாலும்கூட தீவிர கொரோனா பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் அது கணிசமாகவே குறைக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
Post a Comment