கேரளாவில் ஏற்கனவே பாதித்தவர்கள்- முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் அதிகம் கொரோனாவால் பாதிப்பு - Yarl Voice கேரளாவில் ஏற்கனவே பாதித்தவர்கள்- முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் அதிகம் கொரோனாவால் பாதிப்பு - Yarl Voice

கேரளாவில் ஏற்கனவே பாதித்தவர்கள்- முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் அதிகம் கொரோனாவால் பாதிப்பு




கேரளாவில் 40,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோய்த்தொற்றுகள்  இரண்டாவது முறையாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும்  முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் அடங்குவர்.

கொரோனா  விகிதம் எட்டு மாவட்டங்களிலும் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும், சில இடங்களில் அது அதிகரித்து வருவதாகவும் கண்டறியப்பட்டது. இதில்  டெல்டா வகையைச் சேர்ந்த  வைரஸ் பாதிப்புகள் 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன.

ஆறு பேர் கொண்ட மத்திய குழு சமீபத்தில் கேரளாவில் எட்டு மாவட்டங்களுக்கு சென்று தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த மாநில நிர்வாகத்திற்கு உதவியது. 

அந்த குழுவின் அறிக்கையில்  ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 20 வரை, மாநிலத்தில் சுமார் 4.6 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது  என்று எச்சரித்துள்ளது.

ஓணம் பண்டிகைநெருங்குவது (ஆகஸ்ட் 20) மற்றும் சுற்றுலாவுக்கு மீண்டும் அனுமதி அளிப்பது போன்றவை பாதிப்பு அதிகரிக்க காரணமாகும்  இது கவலைக்குரியது என்று மத்திய குழுவின் தலைவரான தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் டாக்டர் சுஜீத் சிங் கூறினார். 

கேரளாவில் ஒரு மாறுபட்ட புதிய வகை கொரோனா வைரஸ்  பங்கு  இருப்பதை  நிராகரிக்க முடியாது என்று  சுகாதார அமைச்சகம்  கூறியுள்ளது.   மாறுபட்ட புதிய வகை கொரோனா வைரஸ்  அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது. இது முற்றிலும் புதிய மாறுபட்ட வைரசாக இருக்கலாம்  என்று சந்தேகிக்கப்படுவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

கேரளாவில் 9  மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களே மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.  

கடந்த ஏழு நாட்களில் நாட்டில் பதிவான கொரோனா பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை கேரளாவில் உள்ளதாக மத்திய அரசு  தெரிவித்துள்ளது.இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்ட பிறகும் மீண்டும் தொற்று ஏற்படுவது  குறித்து ஆராயப்படுகிறது.

பத்தனம்திட்டாவில் முதல் டோஸ் தடுப்பூசி போட்ட  பிறகு 14,974 பேரும்,  இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பிறகு 5,042 பேரும் பாதிக்கப்பட்டனர்

மாறுபட்ட புதிய வகை கொரோனா வைரஸ்  இருக்கிறதா என்பதைப் அறிந்துகொள்ள அனைத்து முன்னேற்ற நோய்த்தொற்றுகளுக்கும் மரபணு வரிசைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும்.

கேரளாவில்  40,000 மாதிரிகள்  100 சதவீத  மரபணு வரிசைமுறை  சுகாதார துறையின் விருப்பப்பட்டியலில் உள்ளது. அவர்கள் இதுகுறித்து  கேரள அரசுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post