தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடமாடும் சேவை, சாவகச்சேரி சுகாதார சேவைகள் பணிமனையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தடுப்பூசி வழங்கும் நடமாடும் சேவை இன்று கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.
தென்மராட்சி பிரதேசத்தில், எழுதுமட்டுவாழ், வரணி, கொடிகாமம், கைதடி போன்ற பகுதிகளில் அண்மை நாட்களாக அதிகளவான தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தென்மராட்சியில் நேற்றும் இன்றுமாக் நால்வர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
பாரிய ஆபத்தை கண்டுள்ள தென்மராட்சி பிரதேசத்தில் தொற்றை கட்டுப்படுத்தும் பாரிய வேலையாக தடுப்பூசியை வழங்கும் முகமாக சுகாதாரத் துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
Post a Comment