ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கை தாலிபான்கள் இன்னும் கைப்பற்றாத நிலையில், 4 மணி நேரத்துக்குள் சரணடைய வேண்டும் என்று தாலிபான்கள் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் காபூல் நகரை கைப்பற்றியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தாலிபான் அமைப்பினர் கொண்டு வந்துள்ளனர். ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதேவேளையில், வட மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கு இன்னும் தாலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது.
பஞ்ஷிர் பள்ளதாக்கு என்றால் ஐந்து சிங்கங்களின் பள்ளத்தாக்கு என்று அர்த்தம்.
10ம் நூற்றாண்டில் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் விதமாக 5 சகோதரர்கள் முகமது கஜினிக்காக இங்கு அணையை கட்டினர். அதன் காரணமாக இப்பகுதி பஞ்ஷீர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பள்ளத்தாக்கை கடந்த ஆட்சியின்போது கூட தாலிபான்களை கைப்பற்ற முடியவில்லை. அதற்கு முன்பு படையெடுத்த சோவியத் படைகளாலும் இந்த பள்ளத்தாக்கை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட துணை ஜனாதிபதி அம்ருல்லா சலே , பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் பிஸ்மில்லா முகமது உள்ளிட்ட பல்வேறு ஆப்கான் உயர் அதிகாரிகள் இங்கு அடைகளமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகியுள்ள இந்த பள்ளதாக்கை அடைய பஞ்ஷிர் நதியால் உருவாக்கப்பட்ட ஒரு குறுகிய பாதை மட்டுமே ஒரே வழி.
இதனை ராணுவத்தால் எளிதாக பாதுகாக்க முடியும். மரகத கல்லுக்கு பெயர் பெற்ற இந்த பள்ளத்தாக்கு தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பு இருந்தே சுயாட்சி அதிகாரத்தை வேண்டி வருகிறது.
அஹ்மத் ஷா கட்டியெழுப்பிய கோட்டை
இந்த பள்ளத்தாக்கின் சுதந்திரத்தின் வரலாறு, ஆப்கானிஸ்தானின் மிகவும் புகழ்பெற்ற தலிபான் எதிர்ப்பு போராளியான அஹ்மத் ஷா மசூத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, 2001 இல் படுகொலை செய்யப்படும் வரை இஸ்லாமிய அடிப்படைவாத குழுவுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை அவர் வழிநடத்தினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து 1989ல் சோவியத் படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டு போரில் தாலிபான்கள் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றினர். எனினும் பஞ்ஷிர் மட்டுமல்லாது வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை அஹ்மத் ஷா மற்றும் அவரது நேசப் படைகள் கைப்பற்றின.
அஹ்மத் ஷாவும் இஸ்லாமிய அடிப்படை வாதியாக இருந்த போதிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார்
தாலிபான்கள் , சோவியத் படைகள் என யவராலும் வெல்ல முடியாத கோட்டையாக பஞ்ஷிர் பள்ளத்தாக்கு உள்ளது. தற்போது சரணடைய போவதில்லை, இறுதி துளி ரத்தம் உள்ளவரை போரிடப் போவதாக பஞ்ஷிர் பள்ளத்தாக்கு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கை தாலிபான்கள் இன்னும் கைப்பற்றாத நிலையில், 4 மணி நேரத்துக்குள் சரணடைய வேண்டும் என்று தாலிபான்கள் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் காபூல் நகரை கைப்பற்றியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தாலிபான் அமைப்பினர் கொண்டு வந்துள்ளனர். ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அதேவேளையில், வட மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷிர் பள்ளத்தாக்கு இன்னும் தாலிபான்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது.
பஞ்ஷிர் பள்ளதாக்கு என்றால் ஐந்து சிங்கங்களின் பள்ளத்தாக்கு என்று அர்த்தம். 10ம் நூற்றாண்டில் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் விதமாக 5 சகோதரர்கள் முகமது கஜினிக்காக இங்கு அணையை கட்டினர். அதன் காரணமாக இப்பகுதி பஞ்ஷீர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பள்ளத்தாக்கை கடந்த ஆட்சியின்போது கூட தாலிபான்களை கைப்பற்ற முடியவில்லை. அதற்கு முன்பு படையெடுத்த சோவியத் படைகளாலும் இந்த பள்ளத்தாக்கை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட துணை ஜனாதிபதி அம்ருல்லா சலே , பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் பிஸ்மில்லா முகமது உள்ளிட்ட பல்வேறு ஆப்கான் உயர் அதிகாரிகள் இங்கு அடைகளமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளில் இருந்து முற்றிலும் விலகியுள்ள இந்த பள்ளதாக்கை அடைய பஞ்ஷிர் நதியால் உருவாக்கப்பட்ட ஒரு குறுகிய பாதை மட்டுமே ஒரே வழி.
இதனை ராணுவத்தால் எளிதாக பாதுகாக்க முடியும். மரகத கல்லுக்கு பெயர் பெற்ற இந்த பள்ளத்தாக்கு தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்பு இருந்தே சுயாட்சி அதிகாரத்தை வேண்டி வருகிறது.
அஹ்மத் ஷா கட்டியெழுப்பிய கோட்டை
இந்த பள்ளத்தாக்கின் சுதந்திரத்தின் வரலாறு, ஆப்கானிஸ்தானின் மிகவும் புகழ்பெற்ற தலிபான் எதிர்ப்பு போராளியான அஹ்மத் ஷா மசூத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது, 2001 இல் படுகொலை செய்யப்படும் வரை இஸ்லாமிய அடிப்படைவாத குழுவுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை அவர் வழிநடத்தினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து 1989ல் சோவியத் படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டு போரில் தாலிபான்கள் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றினர். எனினும் பஞ்ஷிர் மட்டுமல்லாது வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை அஹ்மத் ஷா மற்றும் அவரது நேசப் படைகள் கைப்பற்றின.
அஹ்மத் ஷாவும் இஸ்லாமிய அடிப்படை வாதியாக இருந்த போதிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார்.
தற்போது அஹ்மத் ஷாவின் பாதையில் அவரது மகன் அஹமத் மசூத் பயணித்து வருகிறார். தாலிபான்களுக்கு எதிராக படைகளை திரட்டி அவர்கள் பயிற்சிபெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
மேலும், தங்களுக்கு ஆயுதங்களையும் வெடிமருந்துகளை வழங்குமாறு அமெரிக்காவும் அஹமத் மசூத் கோரிக்கை வைத்துள்ளனார்.
இதனிடையே 4 மணி நேரத்தில் சரணடைய வேண்டும் என்று பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உள்ளவர்களுக்கு தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்த்து போரிடும் முடிவில்பஞ்ஷிர் பள்ளத்தாக்கு வீரர்கள் இருப்பதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது
Post a Comment