யாழில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் நெருக்கடி - வைத்தியசாலையில் தேங்கியிருக்கும் சடலங்கள் - Yarl Voice யாழில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் நெருக்கடி - வைத்தியசாலையில் தேங்கியிருக்கும் சடலங்கள் - Yarl Voice

யாழில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் நெருக்கடி - வைத்தியசாலையில் தேங்கியிருக்கும் சடலங்கள்



கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்திய சாலையில்  இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எஸ்.ஸ்ரீபவானந்தராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் சில பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கிறோம்.

யாழ் மாவட்டத்தை பொறுத்தவரை கோம்பயன்மணல் இந்து மயானத்தில் மாத்திரமே மின்சாரம் மூலம் சடலங்களை தகனம் செய்யும் வசதி இருக்கின்றது. தினமும் அங்கு நான்கு பேரை மட்டுமே மின்தகனம் செய்யக்கூடிய வசதி இருக்கின்றது. 

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையிலும் சரி ஏனைய வைத்தியசாலைகளிலும் சரி கொரோனாவால் உயிரிழப்பவர்களை அங்குதான் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.

 கடந்த ஐந்து மாதங்களில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 140 பேரும்  ஏனைய வைத்தியசாலைகளில் 16 பேருமென  மொத்தமாக 156 பேரை மின்தகனத்திற்கு அனுப்ப வேண்டி இருந்தபடியால் இன்னும் பல பேரின் சடலங்கள் தேங்கி இருக்கின்றன என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post