முடக்கலின் பெறுபேறு இரு வாரங்களில் தெரியும் : பேராசிரியர் அர்ஜுன டி சில்வா - Yarl Voice முடக்கலின் பெறுபேறு இரு வாரங்களில் தெரியும் : பேராசிரியர் அர்ஜுன டி சில்வா - Yarl Voice

முடக்கலின் பெறுபேறு இரு வாரங்களில் தெரியும் : பேராசிரியர் அர்ஜுன டி சில்வா



நாடு மூடப்பட்டதன் பெறுபேறைக் காட்ட  குறைந்தது இரு வாரங்களாவது எடுக்கும் என ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார். 

தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்திய பின் கொவிட் நோய் தொற்றுகளின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் குறையாது என யாரும் கவலைப்படவோ அல்லது மனநிலை பாதிக்கப்படவோ கூடாது என பேராசிரியர் தெரிவித்தார்.
 
ஊரடங்கு காலத்தின் போது வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் தேவையற்ற நகர்வுகளைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். 

அம்மை நோய்க்கு தடுப்பூசி பெறாத அனைவரும் இந்நேரத்தில் தடுப்பூசி போட ஊக்குவிக்கப்பட வேண்டும்.குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் பேராசிரியர்  கூறினார். 

பொதுமக்கள் தடுப்பூசிகளைத் தெரிவு செய்யாது பெற்றுக்கொள்ளுமாறும் அருகிலுள்ள தடுப்பூசி சிறந்த தடுப்பூசி என்றும் இந்த நாட்களில் பதிவாகும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த பயணங்களின் விளைவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post