ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர்இ ஞாயிறன்று தலைநகர் காபூலையும் பிடித்து விட்டனர்.
இந்நிலையில்ஆப்கான் அணியின் சுழல்பந்துவீச்சாளர் ஸ்பின்னர் ரஷீத் கான் தன் குடும்பத்தினரை ஆப்கானிலிருந்து மீட்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவலை இங்கிலாந்து முன்னாள் கெவின் பீட்டர்சன் தெரிவித்தார்.
ரஷீத் கான் இப்போது இங்கிலாந்தில் ஹண்ட்ரட் கிரிக்கெட்டில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.
உலகத் தலைவர்களே ஆப்கானையும் மக்களையும் காப்பாற்றுங்கள் என்று அவர் உலகத்தலைவர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
இந்நிலையில் ஸ்கை ஸ்போர்ட்ஸில் கெவின் பீட்டர்சன் கூறியதாவது:
ஏகப்பட்ட விஷயங்கள் ரஷீத் கானின் நாடான ஆப்கானில் நடைபெற்று வருகின்றன. நானும் ரஷீத் கானும் இது குறித்து நீண்ட நேரம் பேசினோம்.
அப்போது அவர் தன் குடும்பத்தை ஆப்கானிலிருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை என்று கவலைப்பட்டார். அவருக்கு பாவம் நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன. மிகவும் கவலையாக இருக்கிறார் ரஷீத் கான்இ என்றார்.
மேலும் உள்நாட்டில் இப்படிப்பட்ட ஒரு பெரும்குழப்ப நிலையில் அவர் இங்கிலாந்தில் ஹண்ட்ரட் அணிக்காக பிரமாதமாக ஆடிவருவது அதுவும் கடும் அழுத்தத்தில் அவர் ஆடி வருவது இந்த ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் மிகவும் உள்ளத்தை உருக்கும் ஒரு அத்தியாயமாக இருக்கிறது.
தன் குடும்பம் அங்கு நெருக்கடியில் இருக்கும் போது அவர் அதை மனதிற்குள் வைத்துக் கொண்டு இங்கு ஆடும் திறனை வெளிப்படுத்துவது உண்மையில் நெகிழ்ச்சியானது. பெரிய விஷயம் என்று கெவின் பீட்டர்சன் ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு கூறியுள்ளார்.
Post a Comment