அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன் நகர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை மேலும் ஒரு வாரம் மூடப்படும் என பிரதமர் டான் அன்றூஸ் தெரிவித்துள்ளார்.
டெல்டா கொவிட் பிறழ்வின் காரணமாக 20 புதிய நோய் தொற்றுகளின் ஆதாரங்களைக் கண்டறிய இயலாமையே இதற்குக் காரணமாகும்.
முன்னதாக மெல்போர்னில் தனிமைப்படுத்தல் சட்டம் நாளை வியாழக்கிழமை நீக்கப்படவிருந்தது.
எனினும் புதிய நடவடிக்கைகளின் படி விக்டோரியா மாநிலத்தின் 6 மில்லியன் மக்களில் 5 மில்லியன் பேர் இன்னமும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.
டெல்டா பிறழ்வால் சிட்னியில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக விக்டோரியா மாநில ஆளுநர் கூறினார்.
சிட்னியில் கடந்த 24 மணி நேரத்தில் 344 புதிய தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது உலகளாவிய தொற்று ஆரம்பித்ததிலிருந்து மாகாணத்தில் பதிவான அதிக எண்ணிக்கை இதுவாகும்.
Post a Comment