உடனே நாட்டை முடக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திஸ்ஸமஹாராம தெம்பரவெவ கெமுனுபுர ஶ்ரீவிக்ருத்தாராம விகாரையின் ஶ்ரீமத் ரணசிங்க பிரேமதாஸ பிரிவெனவின் பொறுப்பாளர் சாலியபுர சுதர்ஷன தேரரை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (13) சந்தித்து ஆசி பெற்றதுடன் முக்கிய விடயங்கள் சில குறித்து கலந்துரையாடினார்.
நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலைக்கு மத்தியில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டிது நாட்டின் பொருளாதாரமா அல்லது மக்களின் உயிரா என்ற இரண்டு குறித்து எனவும் உடனடியாக நாட்டை மூடி வைப்பதை தவிர நாட்டு மக்களை வாழ வைக்க வேறு வழி இல்லை என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த அழிவில் இருந்து உயிர்களை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும் அதன் பின்னர் பொருளாதாரம் குறித்து சிந்திக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளைஇ ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாதாந்த சம்பளத்தில் நிதி உதவி வழங்கி நாட்டு மக்களின் நலனுக்கு "
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நிதியம்" இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் எதிர்கட்சித் தலைவர் அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
எதிர்கட்சித் தலைவரின் "எதிர்கட்சியிடம் இருந்து ஒரு மூச்சு" மற்றும் ஜனசுவய திட்டத்தின் கீழ் 22 சுற்றுக்களில் 640 லட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
அதற்கு ஒப்பானதாக "ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நிதியம்" செயற்பட உள்ளதுடன் அதில் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களுக்கு சுகாதார மற்றும் நிவாரண உதவிகள் செய்து கொடுக்கப்படும்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டம் குறித்து தனது கவனத்தை செலுத்தியுள்ள எதிர்கட்சித் தலைவர் "மூன்றாவது தடுப்பூசியை" விரைவில் தருவிக்க வேண்டும் என்றார். இதுவரையில் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் அதனை பெற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எதிர்கட்சித் தலைவர் எடுத்துக் கூறியுள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் எரிவாயு
் விலையை அதிகரித்து அதன் சுமையை மக்கள் மீது சுமத்திய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் உடனடியாக ் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தினார்.
அரசாங்கம் உடனடியாக நாட்டின் உண்மை நிலையை மக்களுக்கு வௌிப்படுத்த வேண்டும் எனவும் அப்படியின்றி மக்களுக்கு பொய் மற்றும் மூடநம்பிகையை கூறுவதை நிறுத்த வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அரசாங்கம் நாகம் வரவழைத்தல் பாணிக்கு பின் செல்லல் பானை கங்கையில் போடல் போன்ற மூடநம்பிக்கைகளில் இருந்து விலகி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
உண்மையை நாட்டுக்கு சொல்லும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் தப்பிச் செல்லாது அனைவருடனும் இணைந்து அழிவில் இருந்து வெற்றிகொள்ள செயற்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ ஆசோசனை வழங்கியுள்ளார்.
Post a Comment