இன வேறுபாடுகளின்றி தாய்நாட்டுக்காக சேவை புரிவதில் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் லக்ஷ்மன் கதிர்காமர் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.
இலங்கையின் கீர்த்திமிகு அரசியல்வாதியும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கொழும்பு 03 இல் அமைந்துள்ள அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சர்வதேச ரீதியில் தாம் செல்வாக்குச் செலுத்திய சட்டத்துறையினை கைவிட்டு சவாலான நேரத்தில் நம் தாய்நாட்டுக்காக முன்வந்து பணியாற்றிய லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் அதற்காக தமது உயிரையும் அர்ப்பணித்தார் என்பதனை கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதன்போது நினைவுகூர்ந்தார்,
Post a Comment