யாழ் கல்லுண்டாயில் பேருந்து தடம்புரண்டு விபத்து - பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி - Yarl Voice யாழ் கல்லுண்டாயில் பேருந்து தடம்புரண்டு விபத்து - பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி - Yarl Voice

யாழ் கல்லுண்டாயில் பேருந்து தடம்புரண்டு விபத்து - பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி



கல்லுண்டாய் வீட்டுத்திட்ட பகுதியில் தனியார் பேருந்தினை முந்த முற்பட்டு  கட்டுப்பாட்டை இழந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து குடைசாய்ந்தது

இலங்கை போக்குவரத்து சபையின் காரைநகர்  சாலைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் -காரைநகர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து இன்றுகாலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில் 

கல்லுண்டாய் வீட்டுத்திட்ட பகுதியில் வீதியில் பயணித்த  காரைநகர்- யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தினை  முந்த முற்படுகையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே பாய்ந்து குடை சாய்ந்தது 

தற்பொழுது கல்லுண்டாய் வீதி  அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த பகுதியில் இன்று காலை மழை பெய்ததன் காரணமாக வழுக்கல் நிலை  காணப்பட்டதாகவும்  வேகமாக வந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும் விபத்தை நேரடியாக பார்த்தோர் தெரிவித்தனர்.

ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த பேருந்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாகவும் மேலும் குறித்த வீதியில் ஒவ்வொரு நாளும் குறித்த பேரூந்தானது மிகவும் வேகமாகவே பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post