கொரோனா நிவாரண நிதியத்திற்கு தியாகி அறக்கொடை நிறுவுனரால் மேலும் ஒரு கோடி ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஐனாதிபதியின் கொரோனா நிவாரண நிதியத்திற்கு இன்று ஒரு கோடி ரூபாவினை பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வழங்கினார்.
கடந்த வருடமும் ஒரு கோடி ரூபா கொரோனா நிவாரண நிதியத்திற்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
யாழ் மாவட்டத்தில் சுகாதார வைத்திய கட்டமைப்பபை மேம்படுத்துவதற்கு பல கோடி ரூபாய்களை தொடர்ச்சியாக வழங்கி வருவதோடு மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக தினந்தோறும் தன்னை நாடி வருபவர்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை தொய்வின்றி வழங்கி வருகின்றார்.
இந்த இக்கட்டாண காலகட்டத்தில் 2கோடி ரூபாய்களை இதுவரைக்கும் ஐனாதிபதியின் நிவாரண நிதியத்திற்கு வழங்கிய தனி ஒரு மனிதராக தியாகி அவர்கள் திகழ்கின்றார்.
Post a Comment