நாட்டை மூன்று வாரங்களிற்கு முடக்கவேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பத்து கட்சிகள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கொவிட் பரவலால் ஏற்படக்கூடிய மிகப்பெரும் பாதிப்பை தவிர்ப்பதற்காக மூன்று வாரங்களிற்கு நாட்டை முடக்கவேண்டியதன் அவசியத்தை பத்து அரசியல் கட்சிகளும் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.
மூன்றுவார முடக்கல் நிலை மருத்துவமனைகளால் சிகிச்சை வழங்க கூடிய அளவிற்கு நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும்என அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
மூன்று வாரத்திற்கு நாட்டை முடக்கினால் கொரோனாவால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையும் என பத்து அரசியல் கட்சிகளும் தெரிவித்துள்ளன.
நாடு முடக்கப்படாமலிருக்கும் நிலையில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர் என ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ள பத்து அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
முடக்கல் மூலம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதும் அத்தியாவசிய சேவையை சேர்ந்தவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் அவர்கள் நாட்டின் பொருளாதார மையநீரோட்டத்தில் இணைந்துகொள்வார்கள் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளன.
நாட்டின் பொருளாதார நிலைமையை நாங்கள் உணர்கின்றோம் மூன்று வார முடக்கம் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கு உதவும் எனவும் அரசியல் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
Post a Comment