நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் சுகாதார பணியாளார்களை இழக்க வேண்டியிருக்கும் - தாதிமார் சங்கம் - Yarl Voice நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் சுகாதார பணியாளார்களை இழக்க வேண்டியிருக்கும் - தாதிமார் சங்கம் - Yarl Voice

நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் சுகாதார பணியாளார்களை இழக்க வேண்டியிருக்கும் - தாதிமார் சங்கம்



நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் உங்களிற்கு பணியாற்றுகின்ற  சுகாதார பணியாளர்களை நீங்கள் இழக்கவேண்டியிருக்கும் என தாதிமார் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போதைய கொவிட் பரவல் 
காரணமாக சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களிற்கு சிசிச்சை அளிப்பதற்கு சுகாதார பணியாளர்கள் இல்லாத நிலையேற்படலாம் என பொதுச்சேவை ஐக்கிய தாதிமார் சங்கத்தின் உபதலைவர் புஸ்பா ரம்யானி டி சொய்சா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் இந்த நிலையேற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.விடைகளை காணவிட்டால் நிலைமை பாரதூரமானதாக மாறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் தெரிவிப்பதை போல மருத்துவமனைகளையும் பிரதே அறைகளையும் அதிகரித்து பிரயோசனமில்லை தற்போதுள்ளவற்றை சிறப்பாக நிர்வகிப்பதே அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post