ஆப்கானில் பறக்கும் விமானத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் தேசிய அணியின் கால்பந்தாட்ட வீரர்! - Yarl Voice ஆப்கானில் பறக்கும் விமானத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் தேசிய அணியின் கால்பந்தாட்ட வீரர்! - Yarl Voice

ஆப்கானில் பறக்கும் விமானத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் தேசிய அணியின் கால்பந்தாட்ட வீரர்!




ஆப்கனில், அமெரிக்க விமானத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர்களில், அந்நாட்டின் கால்பந்து வீரரும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.

காபூல்: அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கன் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கியதிலிருந்தே தலிபான்கள் ஆதிக்கம் அங்கு அதிகரித்துவிட்டது. வெறும் 10 நாள்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி ஆப்கனைக் கைப்பற்றி விட்டனர். 

அந்த வகையில், ஆகஸ்ட் 15ஆம் அதிபர் மாளிகை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.அதற்கு முன்னதாகவே, அப்போதைய அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். 

தொடர்ந்து, தலிபான்கள் ஆட்சிக்கு அதிருப்தி தெரிவித்து ஆப்கன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். 

இதனிடை காபூல் விமான நிலையம் முடக்கப்பட்டு, ராணுவ விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டன.

இதனால் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். 

இதனிடையே, ஆகஸ்ட் 16ஆம் தேதி சிலா் அங்கிருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானத்தின் டயா் பகுதியில் ஏறி அமா்ந்து கொண்டனா். விமானம் பறக்கத் தொடங்கியதும், அதிலிருந்து மூன்று பேர் கீழே விழுந்து உயிரிழந்தனா். 

இதன் காரணமாக அமெரிக்கப் படை வான்வழிப் போக்குவரத்து சேவை தொடர்ந்து நடைபெற வித்திட்டது. 

அதனடிப்படையில் பல்வேறு நாடுகள், ராணுவ விமானங்கள் மூலம் தங்களது நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர். சில நாடுகள் ஆப்கன் மக்களுக்கும் அடைக்கலம் அளிக்க முன்வந்துள்ளன. 

இந்த நிலையில் ஆப்கானில் பறக்கும் விமானத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் தேசிய அணியின் கால்பந்தாட்ட வீரர். என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டின் விளையாட்டுத் துறை இயக்குநர், "ஆப்கன் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு மக்கள் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். ஆனால், விமானங்கள் இயக்கப்படவில்லை.இந்த வேளையில், 

கடந்த திங்கள் கிழமை அன்று ஆப்கனின் தேசிய கால்பந்து அணி வீரரான ஜக்கி அன்வாரி (19), அமெரிக்காவின் போயிங் சி-17 விமானத்தில் ஏற முயற்சித்துள்ளார்.

 அவருக்கு விமானத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. அதன் காரணமாக விமான சக்கரத்தில் ஏறி அவர் அமர்ந்துள்ளார்.அவருடன் மேலும் இரண்டு பேர் இருந்துள்ளனர். பின்னர் விமானம் புறப்பட்டபோது அதிலிருந்து மூவரும் விழுந்து உயிரிழந்தனர். 

இப்படிப்பட்ட சூழலில் இது போன்ற செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. மேலும் மற்ற இருவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post