அவர் சம்மதத்துடன்தான் இரண்டாவது திருமணம் செய்தேன்.. ஆனந்த கண்ணன் குறித்து உருகிய பிக்பாஸ் பிரபலம்! - Yarl Voice அவர் சம்மதத்துடன்தான் இரண்டாவது திருமணம் செய்தேன்.. ஆனந்த கண்ணன் குறித்து உருகிய பிக்பாஸ் பிரபலம்! - Yarl Voice

அவர் சம்மதத்துடன்தான் இரண்டாவது திருமணம் செய்தேன்.. ஆனந்த கண்ணன் குறித்து உருகிய பிக்பாஸ் பிரபலம்!



தன்னுடைய திருமணமே விஜே ஆனந்த கண்ணன் சம்மதத்துடன் தான் நடைபெற்றது என பிக்பாஸ் பிரபலம் உருக்கமாக அவருடைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

சன் மியூஸிக் சேனல் ஆரம்பித்த காலத்தில் அதில் பிரபல விஜேவாக பணியாற்றியவர் ஆனந்த கண்ணன். சன் மியூஸிக் மட்டுமின்றி, சன் டிவி, எஸ் எஸ் மியூஸிக் என் முன்னணி தொலைக்காட்சிகளில் பிரபல விஜேவாக பணியாற்றினார்.

சிந்துபாத், விக்ரமாதித்தன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்தார் ஆனந்த கண்ணன். சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன், பத்து ஆண்டுகள் சென்னையில் தங்கியிருந்து தொலைக்காட்சி சேனல்களில் பணிபுரிந்தார்.

கடந்த 2011ஆம் ஆண்டு மீண்டும் தனது பூர்விகமான சிங்கப்பூருக்கே திரும்பினார். அங்கேயும் பல தொலைக்காட்சி சேனல்களில் விஜே வாக பணியாற்றி சிங்கப்பூர், மலேசிய தமிழர்களிடையே பெரும் பிரபலமானார்
எப்போதும் சிரிர்தத முகத்துடனும் பாஸிட்டிவ் எனர்ஜியுடனும் பேசும் ஆனந்த கண்ணனுக்கு தமிழகத்தில் 90 ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ் என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

 குறிப்பாக பெண் ரசிகைகள் ஆனந்த கண்ணனுக்கு ஏராளம். ஒரு விஜேவுக்கு இவ்வளவு ரசிகர்களா என ஆச்சரியப்பட வைத்தார் ஆனந்த கண்ணன்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள ரசிகர்களை ஈர்த்து வந்தார் ஆனந்த கண்ணன். 

அதுமட்டுமின்றி AK Theatres எனும் கலை அமைப்பை நிறுவி தமிழ் கலாசாரம் சார்ந்த கிராமியக் கலைகளுக்கான பயிலரங்குகளையும் ஆனந்த கண்ணன் நடத்தி வந்தார்.

மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்ட ஆனந்த கண்ணனுக்கு அவா என்ற ஒரு மகளும் ராணி என்ற மனைவியும் உள்ளனர். 

ஆனந்த கண்ணனின் மகள் அவா கல்லூரியில் படித்து வருகிறார். ஆனந்த கண்ணனின் மனைவி ராணியும் சிங்கப்பூர் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக பணிபுரிந்தவர்.

ஆனந்த கண்ணனின் மனைவி ராணியும் அவருடன் இணைந்து கிராமிய கலைகள், தெருக்கூத்துக்கள், மேடை நாடகங்கள் மூலம் கிராமிய கலைகளை பரப்பி வந்தார்.

 சந்தோஷமாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பேரிடி இறங்கியது.அதாவது ஆனந்த கண்ணனுக்கு பித்தப்பையில் புற்று நோய் இருப்பது தெரியவந்தது.

 சிங்கப்பூரில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆனந்த கண்ணனுக்கு உடனடியாக பித்தப்பை அகற்றப்பட்டது. சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணிகளை தொடங்கினார் ஆனந்த கண்ணன்.

ஆனால் சமீபத்தில் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது கல்லீரலிலும் புற்றுநோய் பாதித்திருந்தது தெரியவந்தது.

 இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி இரவு ஆனந்த கண்ணனின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததுஇதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆனந்த கண்ணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அவரது மரணம் தமிழ் சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆனந்த கண்ணனுக்கும் தனக்குமான உறவு குறித்து பிரபல பாடகியான என்எஸ்கே ரம்யா உருக்கமாக பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருப்பதாவது, என்னுடைய அப்பாவாக, சகோதரனாக, நலம் விரும்பியாக நண்பனுக்கும் மேலாக இருந்தவர். என்னுடைய மிகழ்ச்சி மற்றும் துன்பம் இரண்டையும் அவருடன் நான் பகிர்ந்து இருக்கிறேன்.

எப்படி வாழ வேண்டும் எப்படி மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்பதை எப்போதும் எனக்கு நேசிக்க கற்றுக் கொடுத்தவர். என்னுடைய கணவர் சத்யாவை திருமணம் செய்துகொள்வதற்கு கூட அவரிடம் சம்மதத்தை கேட்டேன். 

சின்ன தவறுகளுக்கு கூட என் அம்மா, இவரிடம் ‘பாருப்பா' என்று சொன்ன போதெல்லாம், ரம்யா என் தங்கை அவள் அப்படி எல்லாம் கிடையாது என்று விட்டுக்கொடுக்காமல் பேசுவார்.

எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தவர். இது ரொம்பவே வலிக்கிறது. இதை படிக்க அவர் உயிரோடு இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையின் ஒரு அங்கம். நான் சந்தித்த மனிதர்களில் சிறந்த குணம் கொண்டவர். முழுக்க பாஸிட்டிவ்வான ஒரு ஆன்மா. 

தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருப்பார் ஆனந்த கண்ணன்.
யாராவது இவரை வெளியில் பார்த்துவிட்டு இவருடன் புகைப்படம் எடுக்க நினைத்து தயங்கி நின்றால் இவரே அவர்களிடம் சென்று பேசுவார்.

 அவர்களை சந்தோஷப்படுத்துவார். அவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இனி நான் உன்னை பார்க்க முடியாது அண்ணா.

உனக்கு சொர்க்கத்தில் நிச்சயம் ஒரு சிறப்பான இடம் இருக்கும். நீங்கள் எப்போதும் சொல்வதை போல் "ஐ லவ் யூ மோர்" அவருக்கு என்ன ஆனது என்று கேட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு, அவருக்கு ஆசன குடல் புற்று நோய் இருந்தது. 

அது அவரின் உடல் முழுவதும் பரவிவிட்டது என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார் பாடகி என்எஸ்கே ரம்யா.
மேலும் ஆனந்த கண்ணனுடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் என்எஸ்கே ரம்யா. தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருகிறார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post