அமெரிக்க காங்கிரஸின் நூலகத்திற்கு அருகில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க காங்கிரஸின் நூலகத்திற்கு வெளியே வெடிகுண்டு நிரம்பிய வாகனத்துடன்நபர் ஒருவர் காணப்பட்டமை குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றியுள்ள வீதிகளை பொலிஸார் முடக்கியுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் பணியாற்றுபவர்களை அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள கட்டிடங்களிற்கு செல்லுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் நூலகத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான வாகனம் காணப்படுகின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment