ரத்த வெள்ளம் ஓடுவதை தவிர்க்கவே வெளியேறினேன் - ஆப்கான் ஜனாதிபதி விளக்கம் - Yarl Voice ரத்த வெள்ளம் ஓடுவதை தவிர்க்கவே வெளியேறினேன் - ஆப்கான் ஜனாதிபதி விளக்கம் - Yarl Voice

ரத்த வெள்ளம் ஓடுவதை தவிர்க்கவே வெளியேறினேன் - ஆப்கான் ஜனாதிபதி விளக்கம்



ரத்த வெள்ளம் ஓடுவதை தவிர்க்கவே வெளியேறியதாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய  ஜனாதிபதிஅஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் பல்வேறு பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்ற தொடங்கியபோது   ஜனாதிபதிஅஷ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அந்நாட்டை விட்டு வெளியேறினார்.இதனையடுத்து போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் அறிவித்தனர். 

இச்சூழலில்  அஷ்ரப் கானி ரத்த வெள்ளம் ஓடுவதை தவிர்க்கவே நாட்டைவிட்டு வெளியேறியாகத் தெரிவித்தார்.

 இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அவர், "தாலிபான்கள் என்னை விலகச்செய்துவிட்டனர். அவர்கள் காபூலையும், காபூல் மக்களையும் தாக்கவே வந்திருக்கிறார்கள். 

ரத்த வெள்ளம் ஓடுவதை தவிர்க்க வெளியேறுவதே நல்லது எனக் கருதினேன்எண்ணற்ற மக்கள் இந்தப் பேரழிவில் உயிரிழந்திருந்தால் அவர்கள் காபூலின் அழிவை பார்த்திருப்பார்கள்.

 அறுபது லட்சம் மக்கள் இருக்கும் இடத்தில் இது மனிதப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். 
இது ஒரு வரலாற்றுச் சோதனை. துப்பாக்கிகள், வாள்களின் தீர்ப்பில் அவர்கள் வென்றுவிட்டார்கள்.

 தற்போது ஆப்கான் மக்களை பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமை. மக்களின் இதயங்களையும், சட்டத்தையும் வெல்ல அனைத்து மக்கள், தேசங்கள், பல்வேறு துறைகள், சகோதரிகள், பெண்களின் பாதுகாப்பை தாலிபான்கள் உறுதிப்படுத்த வேண்டும். 

அறிவுடன் செயல்பட்டு தொடர்ந்து நாட்டுக்கு சேவை செய்வேன்" எனக் குறிப்பிட்டார். இருப்பினும் அவர் தனது இருப்பிடம் குறித்து எந்தத் தகவலையும் பகிரவில்லை

0/Post a Comment/Comments

Previous Post Next Post