பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கற்கோவளம் இராணுவமுகாமுக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்களள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதில் பா.உ செ.கஜேந்திரன், மு.பா.உ MK.சிவாஜிலிங்கம், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காணி உரிமையாளர்கள் பிரதேச செயலகத்தால் அழைக்கப்பட்ட போதும் உரிமையாளர்கள் சமூகமளிக்கவில்லை.
உரிமையாளர்கள் சமூகமளிக்காமை காரணமாகவும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பு காரணமாகவும் காணி அளவீட்டை கைவிட்டுத் திரும்பினர்.
Post a Comment