வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம் நேற்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டதாக பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் யாழ்ப்பாணம் அஞ்சலாதேவி சிறீரங்கன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ். மாவட்டத்தில் வரும் கால போகத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நெற்செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்ய வேண்டிய கடப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய விவசாய அமைச்சின் சேதனப் பசளையை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய விவசாயிகள் சேதனப் பசளை உற்பத்தி செய்வதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வாகனப் பேரணி நடத்தப்படுகின்றது.
இதன் மூலம் விவசாயிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் ஊடாக சேதனப்பசளை தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது” என்றார்.
Post a Comment