கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் நேற்று உயிரிழந்தார்.
திருமணம் முடித்து தற்போது கைதடிப் பகுதியில் வசித்துவந்த வசந்தன்(ரஜனி) என்பவரே நேற்று உயிரிழந்தார்.
சுப்பர்மடம் முனியப்பர் ஆலயத் திருவிழாவில் பங்கேற்றோருக்கான பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையில் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு இவர் உயிரிழந்தார்.
சிறந்த ஆரோக்கியத்துடன் இருந்த இவர் கபடி உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தவராவார்.
இவ்வாறான ஆரோக்கியமான ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment