நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்"
அனிருத் இசையில், லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னையில் நடந்தது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது.
இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நானும் ரவுடி தான் படமும் பாண்டிச்சேரியை மையப்படுத்தி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வாரத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment