ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்றிரவு 10.00 மணி முதல் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இக்காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள், ஆடைத் தொழில்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருந்தகங்களின் செயற்பாடுகள் அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தொழிலுக்குச் செல்பவர்கள் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என்றும் வீதித்தடைகளில் உள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் உங்களது அடையாள அட்டையைக் காட்டி அனுமதி பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment