வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்துள்ளார்.
இறுக்கமான சுகாதார ஏற்பாடுகளுடன் இன்று(15.08.2021) குறித்த இரண்டு ஆலயங்களுக்கும் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காசோலைகளை வழங்கி வைத்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய, பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்குறித்த இரண்டு ஆலயங்களுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கிற்கான தனது பிரதிநிதி என்று அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பிரதமரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - 15.08.2021
Post a Comment