தற்போதுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து வெள்ளிக்கிழமை(27) அறிக்கை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலணியின் கூட்டத்திற்குப் பிறகு, 30 ஆம் திகதிக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்கலாமா வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறினார்.
பொதுமக்கள் சுகாதார நெறிமுறைகளை அதுபோல் சுகாதார பழக்கவழக்கங்களை 100 வீதம் பின்பற்றவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் புதிய நோயாளிகள் தோன்றுவதைத் தடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அசேல குணவர்தன கூறினார்.
எனவே, இந்தப் பயணக் கட்டுப்பாடுகளின் போது முடிந்தவரை அதிகமான மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டார். இல்லையெனில் எதிர்காலத்தில் அறிக்கையிடப்படும் நோயாளி களுக்கு பற்றாக்குறை இருக்காது என்றும் அவர் கூறினார்.
Post a Comment