மருந்துகளின் விலை அதிகரிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் - Yarl Voice மருந்துகளின் விலை அதிகரிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் - Yarl Voice

மருந்துகளின் விலை அதிகரிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்



நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம் தெரிவித்துள்ளது. 

பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளும்போது மருந்துகளின் விலை எந்த அடிப்படையில் உயர்த்தப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில் கேள்வி எழுப்பினார். 

மருந்துகளின் விலை 35 - 40 வீதம் அதிகரித்திருப் பதாகவும் தொற்றுநோய்க்கு மத்தியில் இது போன்ற விலை உயர்வு தேவையா எனவும்  அவர் கேள்வி எழுப்பினார்.

சந்தையில் மருந்து தட்டுப்பாட்டை தவிர்க்கும் முகமாக  அவற்றுக்கான விலை உயர்த்தப்பட்டிருந்த விடயத்தை அண்மையில் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண காரணம் காட்டியதையும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post