ஆப்கான் தலைமை அடிபணிந்துவிட்டது எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்' - ஜோ பைடன் - Yarl Voice ஆப்கான் தலைமை அடிபணிந்துவிட்டது எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்' - ஜோ பைடன் - Yarl Voice

ஆப்கான் தலைமை அடிபணிந்துவிட்டது எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்' - ஜோ பைடன்




தலிபான்விவாகாரம் குறித்த சர்ச்சை கருத்துகளுக்கு இடையில் அமெரிக்க படைகளை ஆப்கனிலிருந்து வெளியேற்றும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் தெரிவித்தார்.

ஆப்கான் நாட்டில்  தலிபான்கள் தாக்குதல் நடத்தி ஆட்சியை பிடித்துவிட்டனர்.  ஜனாதிபதி மாளிகை இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே  ஜனாதிபதி  அஷ்ரப் கானி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

அமெரிக்க  ஜனாதிபதி ஜோ பைடன் ஆப்கான் நாட்டிலிருந்து அமெரிக்கப்படைகளை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் ஒட்டுமொத்த அமெரிக்க படைகளையும் அங்கிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளார். . இதனால் தாலிபன் ஆதிக்கத்திற்கு  ஜோ பைடன்தான் காரணம் என்று சர்ச்சைகள் எழுந்தன.

இதனிடையே முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் - ஆப்கான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளை ஜோ பைடன் வெளியேற்றியதன் காரணமாக தலிபான்கள் ஆட்சியை பிடித்துவிட்டனர். இதற்கு முழு பொறுப்பு பைடன்தான். தாலிபன் தாக்குதலை கட்டுப்படுத்த தவறிய பைடன் பதவி விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக  ஜோ பைடன்  தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

 ஆகஸ்ட். 17 "எந்தவித எதிர்ப்புமில்லாமல் ஆப்கான் தலைமை தலிபான்களுக்கு அடிபணிந்துவிட்டது  -. உண்மை எதிர்பார்த்ததைவிட விரைவாக வெளிபட்டுவிட்டது. அரசியல் தலைவர்கள் நாட்டை எளிதாக கைவிட்டு வேறுநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஆப்கான் ராணுவம் போராட முயற்சிக்காமலேயே தோல்வியை தழுவியுள்ளது. கடந்த வாரமே ஆப்கான் படைகள் பின்வாங்க தொடங்கிவிட்டன. 

ஆப்கான் படைகள் தங்களது நாட்டிற்கே போராட தயாராக இல்லாதபோது அமெரிக்கப் படைகளை தாக்குதலில் ஈடுபடுத்த முடியாது. 2001 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்காக மட்டுமே சுமார் 8 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.

ஆப்கானில் மிகவும் திறமையான ராணுவ வீரர்கள் உள்ளனர். இருப்பினும்இ கடந்த இருபது ஆண்டுகளாக அவர்களால் தாலிபன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுக்கு உண்மையான எதிர்ப்பு என்னவென்று தெரியவில்லை. 

அமெரிக்கப்படைகள் இன்னும் இருபது ஆண்டுகள் இருந்தாலும் அதன்பின் எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை. 

எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்எனவே 'எனது முடிவு சரியானது'. அதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆப்கான் நாட்டின் சொந்த படைகளே இல்லாதபோது அமெரிக்கப் படைகளை தாக்குதலில் ஈடுபடுத்துவது தவறு. 

 அரசியல் தலைவர்கள் மக்களின் நலனுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தக்கூட முயலவில்லை. அமெரிக்கப்படைகள் வெளியேற்றப்பட உள்ளது என்பது அவர்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது.

 இருப்பினும் அவர்கள் தாக்குதலுக்கு தயாராகாமல் இருந்தனர். இது வெளிப்படையான தவறு.
அமெரிக்கா கடந்த காலத்தில் செய்த தவறுகளை நான் மீண்டும் செய்ய அனுமதிக்க மாட்டேன். காலவரையாற்ற போராட்டத்தில் ஈடுபடுவது முட்டாள்தனம். உள்நாட்டுப் போரை இரட்டிப்பாக்குவதற்கான செயல்.

 இதனை புறக்கணிக்க முடியாது. ஆப்கானிலிருந்து வெளியாகும் செய்திகள் வருத்தத்தை அளிக்கின்றன. அந்நாட்டு மக்களின் வேதனையை நானும் ஒத்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post