தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மேலும் மூன்று மாகாண தலைநகரங்களை
கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகரில் முகாமிட்டிருந்த தலிபான் பயங்கரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்ட காணொலியை ஆப்கானிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 13 பேர் படுகாயமடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 6 நாட்களில் 8 மாகாணங்களின் தலைநகரங்களைக் கைப்பற்றிய தலிபான்கள் தலைநகர் காபுலைக் கைப்பற்றத் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மேலும் மூன்று மாகாண தலைநகரங்களையும், நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஒரு உள்ளூர் ராணுவ தலைமையகத்தையும் கைப்பற்றினர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தலிபான்கள் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கைக் கட்டுப்படுத்துகின்றனர்.
Post a Comment