தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறுவோரைக் கைது செய்ய விஷேட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றிரவு முதல் இச்செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்காக தனி பொலிஸ் குழுக்களை நியமிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாட்டை மூடுவதற்கு அரசு எடுத்த முடிவின்படி இந்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரைக் கைது செய்ய இன்றிரவு 10.00 மணி முதல் 30 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளைப் பயன்படுத்தி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Post a Comment