யாழில் தன்னை பொலிஸ் என கூறி தந்திரமாக கொள்ளையடித்து வந்த ஆசாமி கைது - நகைகள் பணம் என்பன பொலிஸாரால் மீட்பு - Yarl Voice யாழில் தன்னை பொலிஸ் என கூறி தந்திரமாக கொள்ளையடித்து வந்த ஆசாமி கைது - நகைகள் பணம் என்பன பொலிஸாரால் மீட்பு - Yarl Voice

யாழில் தன்னை பொலிஸ் என கூறி தந்திரமாக கொள்ளையடித்து வந்த ஆசாமி கைது - நகைகள் பணம் என்பன பொலிஸாரால் மீட்பு



தன்னை பொலிஸ் என கூறி தந்திரமான முறையில் நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்த நபரை யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவினர் கைது செயதனர்.

யாழ் நகரப்பகுதி, நாவற்குழி, அரியாலை, மானிப்பாய் போன்ற இடங்களில் தனிமையில் நடமாடும் வயோதிபர்கள் பெண்களை குறிவைத்து அவர்களிடம் சென்று தன்னை பொலிஸ் என அறிமுகப்படுத்தி பேச்சு கொடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அவர்கள் அசரும் நேரம் பார்த்து அவர்கள் உடமையில் இருக்கும் நகை, பணம் தொலைபேசி என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

குறித்த நபர் கடந்த 2 வாரங்களில் 6 இடங்களில் குறித்த நபர் கொள்ளை சம்பவஙகளில் ஈடுபட்டுவந்துள்ளார். இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பில் விசாரணைகளை குற்றத்தடுப்புபிரிவு பொலிஸார் மேற்கொண்டனர். யாழ் பொலிஸ்நிலைய புலனாய்வு பிரிவினரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ் நாவற்குழி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் யாழ் குற்றத் தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 2 தங்கச் சங்கிலி 17,000 ரூபாய் பணம் உடபட மூன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான கொள்ளைப்பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

இதேவேளை குறித்த கொள்ளைச்சம்பவங்களிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரினது மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.குறித்த கைது  நடவடிக்கை யாழ் குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி நெவின் பிரியந்த தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான விஜயகாந்த் வாகிசன் போன்ற குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post