நேட்டோவிற்காக பணிபுரிந்தவர்களையும் ஆப்கான் அரசாங்கத்திற்காக பணிபுரிந்தவர்களையும் தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையை தலிபான் ஆரம்பித்துள்ளது என ஐநா அறிக்கையொன்று எச்சரித்துள்ளது.
வீடுவீடாக சென்று தங்களிற்கு தேவையானவர்களை தலிபான்கள் தேடுகின்றனர் குடும்பத்தவர்களை அச்சுறுத்துகின்றனர் என ஐநா தெரிவித்துள்ளது.
ஐநாவிற்கு புலனாய்வு தகவல்களை வழங்கும் நோர்வேiயை சேர்ந்த ரிப்டோ உலகளாவிய பகுப்பாய்வு மையம் என்ற அமைப்பு இந்த இரகசிய தகவல்களை வழங்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.
தலிபான் பெருமளவானவர்களை இலக்கு வைத்துள்ளது ஆபத்து தெளிவாக தெரிகின்றது என ரிப்டோ அமைப்பின் தலைவர் கிறிஸ்டியன் நெலெமென் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
நேட்டோ மற்றும் அரசாங்கத்திற்கு சார்பாக செயற்பட்டவர்கள் சரணடையாத பட்சத்தில் தலிபான்கள் அவர்களை கைதுசெய்து விசாரணை செய்து தண்டிப்பார்கள் குடும்பத்தவர்களையும் தண்டிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தலிபானின் பட்டியலில் உள்ளவர்கள் கடும் ஆபத்தில் உள்ளனர் பெருமளவு கொலைகள் இடம்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment