ஆப்கானில் தலிபானின் அரசாங்கத்தை அவசரப்பட்டு இலங்கை அங்கீகரிக்க கூடாது என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கான் மீண்டும் பயங்கரவாதத்தின் மையமாக மாறும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ள ரணில்விக்கிரமசிங்க காபுலில் உள்ள தூதரகத்தை இலங்கை மூடவேண்டும் ஆப்கானிற்கான பயணங்களை கட்டுப்படுத்தவேண்டும் எனவும் ரணில்வி;க்கிரமசி;ங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பமியான் புத்தரின் சிலையை அழித்தது தலிபான்களே என்பதை அவர் நினைவுபடுத்தியுள்ளார். அந்த பிராந்தியத்திலிருந்து அகற்றப்பட்ட பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம் என்பதையும் ரணில்விக்கிரமசி;ங்க நினைவுபடுத்தியுள்ளார்.
ஏற்கனவே உலகம் பெருந்தொற்றின் பிடியில் சிக்குண்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் தற்போது உலகம் இன்னொரு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தலிபான் ஆப்கானை ஆட்சி செய்த காலத்திலேயே செப்டம்பர் 11 தாக்குதலிற்கு காரணமானஅல்ஹைதா உட்பட பல ஜிகாத் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் செயற்பட்டன எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய தலிபான் அரசாங்கத்தின் கீழ் ஆப்கான் மீண்டும் பயங்கரவாதிகளும் ஜிகாத் தீவிரவாதிகளிற்குமான தளமாக மாறக்கூடும் என அனைவரும் கரிசனை கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள ரணில் வி;க்கிரமசிங்க உலக நாடுகளின் மீதான தாக்குதலையும் குரானை தவறாக அர்த்தப்படுத்தியவர்களையும் இலங்கை அங்கீகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பாரம்பரிய இஸ்லாமிய நாடுகளிற்கும் ஏனைய நாடுகளிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது- தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிக்கவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment